
அண்ணா பல்கலைக் கழகம் நடப்பாண்டிற்கான ஏப்ரல் ,மே மாத பருவத் தேர்வினை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் தேர்வர்கள் புத்தகம் மற்றும் இணையத்தை பயன்படுத்தி விடையளிக்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி,அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் ,மே மாத பருவத் தேர்வுகள் இணைய வழியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,மேலும் தேர்வுகள் புத்தகத்தை பார்த்து விடை எழுதும் வகையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,கேட்கப்படும் கேள்விகள் நேரடியாக புத்தகத்தில் இருக்காது எனவும்,விடைகளை புத்தகத்திலும் ,இணையத்திலும் தேடி ஆராய்ந்து விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பருவத் தேர்வானது மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.மேலும் ,5 கேள்விகளுக்கு தலா 2 மதிப்பெண்கள் மற்றும் 5 கேள்விகளுக்கு 8 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தேர்வர்கள் தேர்வில் மொத்தம் 12 பக்கங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இந்தத் தேர்வானது ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வர்கள் தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.