அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஜூன் 14 முதல் ஆன்லைன் மூலம் தொடக்கம்..

அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்து வருவதால், மாணவர்களுக்கு கல்லூரிகளை திறந்து தேர்வு நடத்துவது என்பது கடினமான காரியம் என்பதால், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஒழுங்குமுறைப்படி அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மற்ற மாணவர்களுக்கான(ரெகுலேஷன்) தேர்வுகள் ஜூன் 21ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமல் உள்ள மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்..

Mon May 24 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகக்தில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து 27,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15,54,759 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். […]
district-wise-corona-in-tamilnadu-23-5-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய