
அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 வது நாளாக விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் , நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் தெரிவித்துள்ளார் .
கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் , அதிபர் ட்ரம்பிற்கும் மற்றும் ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது . இதனிடையே அமெரிக்காவின் பெரும் மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற 270 இடங்கள் தேவைப்படும் நிலையில், 300 இடங்களில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும், நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றுள்ளார் ஜோ பிடன் .அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை யாரும் பெற்றிடாத வாக்குகளை பெற்றுள்ளார் ஜோ பிடன். இதுவரை ஜோ பிடன் அவர்கள் 74 மில்லியன் வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
பென்சில்வேனியா மாகாணத்தில் இதுவரை 9,288 நேரடி வாக்குகளில், ஜோ பிடன் அவர்கள் 7,300 வாக்குகளையும், டிரம்ப் அவர்கள் 1,875 வாக்குகளையும் பெற்றுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மற்றும் பாதுகாப்பாகவும் எண்ணப்பட்டு வருகிறது.