
அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது ,மறுநாள் புதன்கிழமை நிறைவு பெற்றது .அமெரிக்கா அதிபர் தேர்தலில் உள்ள 538 சபை தேர்வாளர்கள் உள்ளனர் .இதில் 270 மற்றும் அதற்கும் மேற்பட்ட தேர்வாளர்களின் வாக்குகளை கொண்டவரே அடுத்த அதிபராக அமர முடியும் .
அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரமானது 264 இடங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.214 இடங்களுடன் டிரம்ப் பின்தங்கிய நிலையிள் உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒன்றாக ,முஸ்லிம்களின் அதிகப்பட்ச வாக்கானது ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் அவர்களுக்கு சென்றது . முஸ்லிம்களின் வாக்கு 69 சதவிகிதம் ஜோ பைடனுக்கும் ,17 சதவிகிதம் ட்ரம்ப் க்கு கிடைத்துள்ளது .இந்த வாக்கு எண்ணிக்கை சதவிகிதமானது அமெரிக்க – முஸ்லீம் கவுன்சில் (CAIR) ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .