
அமெரிக்க அதிபர் தேர்தலானது நவம்பர் 3 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் ,இறுதி கட்ட பிரச்சாரமானது உச்சகட்டத்தை எட்டியநிலையில் இருக்கிறது .அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள முக்கிய போட்டியாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் முக்கிய நிலையில் உள்ளனர் .தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப்ன் பதவிக்காலமானது நவம்பர் மாதத்தோடு முடியும் தருவாயில் அடுத்த அதிபருக்கான தேர்தல் காலம் மும்மரமாகிவருகிறது .
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் சார்பாக தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரை எதிர்த்து டெமோகிராடிக் கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் அவர்கள் போட்டியிடுகிறரர் .டெமோகிராடிக் கட்சியின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறரர் .இந்திய வம்சாவளியான இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவர் .

அமெரிக்க அதிபர் தேர்தலானது நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ,முன்கூட்டியே வாக்களிக்கும் முறையானது அந்நாட்டில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .இதுவரை 75 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .இது கடந்த ஆண்டு தேர்தல் (2016)சதவிகிதத்தை விட 54 சதவிகிதம் உயர்ந்துள்ளது .தற்போதைய தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் டொனால்ட் டிரம்ப் ஃப்ளோரிடாவில் மாகாணத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும் மற்றும் டெமோகிராடிக் கட்சியின் அதிபரான ஜோ பைடன் அவர்கள் வில்மிங்டனில் உள்ள வாக்குச்சாவடியிலும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
அமெரிக்காவில் முக்கிய பிரச்சனைகளில் அதிகம் விவாதத்திற்குள்ளான குடியேற்ற சட்டங்கள் பற்றி இரு கட்சிகளுமே ஒரே செயல்பாட்டை கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது .தேர்தலில் போட்டியிடும் இந்த இரு கட்சிகளும் சட்டப்பூர்வமாக இங்குள்ள மக்களுக்கு சாதகமாக செயல்படுவது போல தோற்றம் அளித்தாலும், உண்மையில், குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்குவதில் தீவிரத்தை காட்டி வருகின்றன.

பொதுவாக அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் ,தமிழர்களுக்கும் ஜோ பைடன் அதிபராக வந்தால் நல்லது என ஒரு சிலர் அவர்களது கருத்துகளை கூறி வருகின்றனர் .இருந்தபோதிலும் இந்தியர்கள், தமிழர்கள் நலனில் இருந்தோ, மனித நேய நோக்கிலோ ஒன்றும் செய்துவிடமாட்டார்கள் என்பதும் ஒரு சிலருடைய கருத்தாக இருந்து வருகிறது .
தற்போது நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான செலவானது வரலாற்றிலேயே அதிக அளவு செலவீனங்களை கொண்ட தேர்தலாகும் .இது கடந்த தேர்தல் (2016) செலவை விட இருமடங்கு அதிகமாகும் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது .தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்கு 14 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.10,43,89,95,00,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.