நவம்பர் 1 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி : தமிழக அரசு..

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு சிலவற்றிற்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.அவை ..

  • மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.
  • தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருள்காட்சிகள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.
  • மழலையர், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்குபெற அனுமதி
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் வரை கலந்துகொள்ளலாம்.

இன்று முதல் தளர்வுகளுடன் அனுமதிக்கப்பட்டவை :

  • ஏற்கெனவே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவகங்கள் மற்றும் கடைகள், அடுமனைகள் இன்று முதல் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தனியார் பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொதுவான வழிகாட்டு நடைமுறைகள் :

  • கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Next Post

நவம்பர் 1 முதல் மழலையர், நர்சரி பள்ளிகளைத் திறக்க அனுமதி : தமிழக அரசு..

Thu Oct 14 , 2021
தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருள்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகள் உணவகங்கள் இன்று முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்களில் 100 பேர் வரை பங்கேற்கலாம். […]
Nursery-schools-open-from-nov1
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய