
வான் இலக்கைத் நிலத்திலிருந்து தாக்கி அழிக்கும் ‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நேற்று வெளியிட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை ஆளில்லா விமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை மேம்படுத்திய பின்னர் , விமானத்தில் இருந்து பரிசோதிக்க மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.