ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி – டி.ஆர்.டி.ஓ (DRDO)

தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்தது.

ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து இன்று ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.ஆகாஷ் என்ஜி ஏவுகணையானது பாதுகாப்புத் துறையைச் சோந்த நிறுவனங்களுடன் இணைந்து டிஆர்டிஓ தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் என்ஜி ஏவுகணையானது சோதனையின் போது திட்டமிடப்பட்ட 30 கி.மீ தூர இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி இலக்கை அழித்தது.

ஆகாஷ் ஏவுகணையானது (ஆகாஷ்-என்.ஜி.) 2.5 மாக் வேகத்தில் செல்லக்கூடியது.மேலும் இது தரைப்பரப்பிலிருந்து 60 கி.மீ. தொலைவு வரை விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. கடந்த 3 நாள்களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மேற்கொண்ட மூன்றாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

Next Post

புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு : பிரான்ஸ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..

Fri Jul 23 , 2021
உலகம் முழுவதும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.இதில் குறிப்பாக டெல்டா வகை கொரோனா முக்கிய பங்கு வகிக்கிறது.நடப்பாண்டில் மற்றுமொரு கொரோனா வைரஸ் உருவாக சாத்தியம் உள்ளதாக பிரான்ஸ் அரசின் விஞ்ஞானிகள் குழு தலைவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஆல்பா, டெல்டா வகை வைரஸ்கள் மரபியல் மாற்றம் அடைந்து வரும் நிலையில் ,இந்த வகை கொரோனா வைரஸானது […]
new-type-of-variant-corona

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய