வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 8 முதல் மாணவர் சேர்க்கை ..

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் மூலமாக 11 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, இந்த கல்வியாண்டு முதல் வேளாண்மை, தோட்டக்கலை பட்டப் படிப்புகள் தமிழ் வழியிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளன. கோவை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், கோவை தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இந்த தமிழ் வழி படிப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடப்பு கல்வியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தோட்டக்கலைக் கல்லூரி, கரூர், நாகை மாவட்டம் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ள 3 வேளாண்மைக் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக மாணவர் சேர்க்கைப் பிரிவு தலைவர் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Mon Sep 6 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 16,256 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,036 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 18 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 206 பேருக்கும்,சென்னையில் 145 […]
district-wise-corona-updates-6-9-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய