
2022 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிவித்துள்ளது.
Rashtriya Indian Military College, Dehradun, January 2022
வயது வரம்பு : குறைந்தபட்சம் 11 1/2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை( 01.07.2021 ஆம் தேதியின்படி) இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்
எழுத்துத் தேர்வு: விண்ணப்பத்தாரர்களுக்கு முதற்கட்டமாக 05.06.2021 அன்று எழுத்துத்தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக 06.10.2021 அன்று நேர்முகத் தேர்வானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் : தேர்வு கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.600 மற்றும் எஸ்சி ,எஸ்டி பிரிவினருக்கு ரூ.555 செலுத்த வேண்டும்.தேர்வு கட்டணத்தை “The Commandant, RIMC, Dehradun”, payable at State Bank of India -Tel. Bhavan Branch, Dehradun (Bank Code – 01576) என்ற பெயரில் டி.டி யாக எடுத்த அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2021
விண்ணப்பங்கள் சென்று சேர்வதற்கான அஞ்சல் முகவரி :
The Controller of Examinations,
Tamil Nadu Public Service Commission,
TNPSC Road, Park Town,
Chennai-600 003
மேலும் அறிய ..ADMISSION TO THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE,DEHRADUN