கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1-க்குப் பின் தொடக்கம்..

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தொடங்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நடைப்பெற்று வருவதாக எழுந்த தகவலின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் மாநில பாடத் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படுவதன் காரணமாக, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகே கல்லூரி மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் வழக்கமான சேர்க்கை முறையே தொடரும் என்று கூறியுள்ளார்.பின்னர்,முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் சலுகைகள் வழக்கம் போல தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Mon Jun 28 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 597, ஈரோட்டில் 506 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 98 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் […]
district-wise-active-and-discharged-cases-in-TN-1
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய