
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும்,கல்லூரிகளும் மூடப்பட்டன.தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் காரணமாக பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது.மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 9ம் வகுப்பு வரையிலானோருக்கு, மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தளத்தின் சிறப்பு எண் இருந்தால் போதும். அந்த எண்ணில் உள்ள விவரங்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்க்கலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.