புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை : மத்திய அரசு அனுமதி..

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி தற்போது அளித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் 1650 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை புதிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களுக்கு உடனடியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதைபோல் திருவள்ளூர், ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல் மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 800 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிகநீண்ட காலத்திற்கு இருக்கும் : உலக சுகாதார நிறுவனம்..

Tue Sep 28 , 2021
கொரோனா வைரஸ் தொற்று பரவல் என்பது எதிர்பார்த்த கால அளவைக் காட்டிலும் மிகநீண்ட காலத்திற்கு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என பரிணமித்த வைரஸ் தொற்று பல நாடுகளில் மூன்றாம் அலை பாதிப்பிற்கு இட்டுச் சென்றுள்ளன. 2019ஆம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட […]
corona-spread-in-longtime-WHO
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய