அரசு பள்ளிகளில் 14-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ந் தேதி முதல் தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது . தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் வருகிற 14-ந் தேதி பள்ளியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறாத காரணத்தினால் வருகிற 14-ந் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆயத்த பணிகளை செய்ய வேண்டும்.மேலும் தலைமை ஆசிரியர், நிர்வாக ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-1 மாணவர் சேர்க்கையானது வருகிற 21-ந் தேதியில் இருந்து தொடங்க உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் மாணவர்களை சேர்ப்பதற்கும், சத்துணவு சாப்பிடக்கூடிய மாணவர்களுக்கு அதற்கான உணவு பொருட்களை வழங்கவும், பள்ளிக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று..

Fri Jun 11 , 2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நான்காவது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் தொற்றை முறியடித்து வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 91,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,92,74,823 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று […]
corona-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய