புதுச்சேரியில் சென்டாக் மூலம் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ..

புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் உயர் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் சென்டாக் மூலம் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் நவம்பர் 8-ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு, அரசு ஒதுக்கீடு, அனைத்து இந்திய நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு சேர்க்கைக்காக சென்டாக் இணையதளத்தில் (centacpuducherry.in) விண்ணப்பிக்கலாம் என, செண்டாக் நிர்வாகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 8 ஆம் தேதி முதல் நவம்பர் 22 ஆம் தேதி வரை பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கொரோனா தீவிரத்தை குறைக்கும் ஃபைசர் மாத்திரைகள் - ஆய்வில் தகவல்..

Sat Nov 6 , 2021
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான ஃபைசர் மாத்திரைகள், தீவிர கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்களின் மருத்துவமனை தேவையையும் உயிரிழப்பையும் 89 சதவிகிதம் குறைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதன் ஆய்வக பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் மெர்க் நிறுவனம், ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா மாத்திரைகளை காட்டிலும் இது பயனுள்ளதாக இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், ஆய்வு முடிவுகளை ஃபைசர் நிறுவனம் இன்னும் […]
Pfizer-tablet-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய