
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையானது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ,இதற்கான திட்டமும் ,புதிய ஏற்பாடுகளும் நடைபெற்றது இருப்பதாக கூறப்படுகிறது .
சமீபத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது . கொரோனா பரவல் காரணமாகவும் ,மேலும் ஆசிரியர் ,பெற்றோர் கருத்துக்களை கேட்டரிந்த நிலையிலும் மற்றும் பிற தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது .
இதன்படி ,தேர்வின்றி தேர்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு மூலம் 11-ம் வகுப்பு சேர்க்கையை நடத்த திட்டமிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது .