
தரமணியில் உள்ள அரசு டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ள தரமணியில் ‘டெக்ஸ்டைல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ என்ற, நெசவு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்களை www.tngptc.in, www.tngptc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரமணியில் உள்ள டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை அணுகியும், இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாக வரும் 12ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் கல்வி கட்டணமாக 2000 மற்றும் மாணவர்களுக்கான அரசு உதவித் தொகையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.