
இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு வருகிறது .இணையதளம் மூலம் 13 -12 -2020 (ஞாயிற்றுக்கிழமை)முதல் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது .முதல் நாள் தொடக்கத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் இயங்கிவரும் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன .இதில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 50 இடங்களும் மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது .இதைபோன்றே 20 தனியார் இடங்களில் 65 சதவிகிதம் மாநில அரசுக்கும் ,35 சதவிகிதம் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் உள்ளன .
பாரம்பரிய மருத்துவ படைப்புகளான சித்தா,ஆயுர்வேத ,யுனானி ,ஹோமியோபதி (BSMS,BAMS,BUMS,BHMS) போன்ற பட்டபடிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையானது நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெற உள்ளது .இதற்கான விண்ணப்ப விநியோகமானது www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது .
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் இயங்கிவரும் அரசு கல்லூரிகளில் உள்ள மொத்தம் 330 இடங்கள்:
1 .சித்த மருத்துவக் கல்லூரி -60 இடங்கள் (அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகம்,அரும்பாக்கம்)
2 .யுனானி மருத்துவக் கல்லூரி – 60 இடங்கள்
3 .சித்த மருத்துவக் கல்லூரி- 100 இடங்கள் (பாளையங்கோட்டை ,திருநெல்வேலி மாவட்டம் )
4 .ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி-50 இடங்கள் (திருமங்கலம்,மதுரை மாவட்டம் )
5 .ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி -60 இடங்கள் (நாகர்கோவில்,கன்னியாகுமரி மாவட்டம் )
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 5 .30 மணிக்குள் கீழ்கண்ட முகவ்ரிக்குள் அணுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
செயலாளர் ,தேர்வுக்குழு ,
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் அலுவலகம் ,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம் ,
அரும்பாக்கம் ,சென்னை -600 106 .