
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் கூடுதல் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் ,
- தமிழகத்தில் தளர்வுக்ளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
*அனைத்து வகை கடைகள், மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கம். - நவம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி
- தமிழகத்தில் தனித்து இயங்கும் அனைத்து வகை மதுக்கூடங்களுக்கும் (பார்கள்) அனுமதி.
- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-வது வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி அளிக்கப்படும்
- கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி
- விளையாட்டு அரங்குகளில் பயிற்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதி.
- சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதி.