
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் மையங்களை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலைமையானது ஏற்படுகிறது.இதன் மூலம் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.மேலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 28 மையங்களும், புதுச்சேரியில் ஒரு மையமும் மட்டுமே இருக்கிறது.இந்த தேர்வு மையங்கள் விண்ணப்பத்திற்கான இணையதளம் திறந்த 3 மணி நேரத்தில் அனைத்து தேர்வு மையங்களும் நிரம்பிவிடுகின்றன.இதனால் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி அமர்வு முன்பு எடுத்து வைக்கப்பட்டது.நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு எழுதலாம் அல்லது மாநிலங்களுக்குள்ளாகவே தேர்வை எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த ஆண்டு முதலே கூடுதல் தேர்வு மையங்களை அமைக்காவிட்டாலும் அடுத்தாண்டாவது மாணவர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்திலேயே தேர்வு எழுதக்கூடிய வகையில் கூடுதல் தேர்வு மையங்களை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.