நாடு முழுவதும் ஒரே நாளில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,96,33,105 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2542 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,83,88,100 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,79,573 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர்.நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை விட குறைவாகவே உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,65,432 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 26,19,72,014 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

விண்டோஸ் 10-க்கான ஆதரவு 2025ல் முடிவுக்கு வருகிறது : மைக்ரோசாஃப்ட் அதிரடி அறிவிப்பு..

Wed Jun 16 , 2021
விண்டோஸ் 10-க்கான ஆதரவை 2025 உடன் முடிவுக்குக் கொண்டுவருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் ,விண்டோஸின் அடுத்த பதிப்பை விரைவில் அறிமுகப்படுத்தத் ஆயத்தமாக வருவதன் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸை தொடர்ந்து புதுப்பித்து அடுத்தடுத்த வெர்ஷனை பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தி வருகிறது. விண்டோஸ் 10-யை கடந்த ஜூலை 29, 2015 அன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து விண்டோஸின் அடுத்த […]
microsoft-windows-10-OS
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய