செல்வராகவன் – தனுஷ் -யுவன் ஷங்கர் ராஜா மெகா கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன் 2 : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது !!

செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் பல்வேறு வெற்றி படங்கள் வெளிவந்துள்ளன .இந்நிலையில் மீண்டும் கைக்கோர்க்கும் தனுஷ் மற்றும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை இயக்குனர் செல்வராகவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் . இதுவரை செல்வராகவன் -தனுஷ் இணைந்து துள்ளுவதோ இளமை ,காதல் கொண்டேன் ,புதுப்பேட்டை ,மயக்கம் என்ன போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.

இயக்குனர் செல்வராகவனின் மற்றுமொரு கூட்டணியாக யுவன் ஷங்கர் ராஜா உள்ளார் .செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை,காதல் கொண்டேன்,7 ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை ,என்ஜிகே போன்ற பல்வேறு படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .இதில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வெளிவராத படமான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் மன்னவன் வந்தானடி போன்ற படங்களுக்கும் யுவன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் மூலம் மீண்டும் செல்வராகவனுடன் கைகோர்க்க உள்ளார் இசையமைப்பாளர் யுவன் .

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில்,ரசிகர்களின் அன்புக்காகவும் ,ஆதரவுடனும் ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரை வெளியிட்டார் .இப்படமானது 2024 இல் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார் .

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் நாயகன் தனுஷ் இப்படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ,இப்படமானது செல்வராகவனின் கனவு படமாகும் .இது ஒரு பிரம்மாண்டமான படமாகும் .2024 ல் இப்படம் வெளியாகும் எனவும் ,இப்படத்தின் படப்பிடிப்புக்கு முன்பு நடைபெற உள்ள பணிகளுக்கு ஒரு வருடம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார் .

Next Post

இயக்குனர் பாலா தயாரித்துள்ள விசித்திரன் படத்தின் டீசர் வெளியானது !!

Sat Jan 2 , 2021
விசித்திரன் படத்தின் டீசர் ஆனது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது .இயக்குனர் பாலா தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக சுரேஷ் மற்றும் நாயகியாக பூர்ணா ,மது ,ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர் .இப்படத்தை பத்மகுமார் இயக்கியுள்ளார் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் .விசித்திரன் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
visithiran-movie-teaser-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய