
ஆவின் நிறுவனத்தில் டெக்னீஷியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .ஆவின் நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் உள்ள நேரடி நியமனம் மூலம் டெக்னீஷியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இந்த அறிவிப்பானது 3223/TPR/Estt/2020-21 என்ற விளம்பரம் எண்ணின் கீழ் அறிவிப்பு வெளியாகியுள்ளது .
நிறுவனம் : Tirupur District Co-op.Producer’s Union Ltd
மொத்த காலியிடங்கள் : 13
பணி விவரம் :
Technician (Lab)-01
Technician(Electrical)-01
Technician(Refrigeration)-01
Technician(Operation) -01
Technician(Boiler)-01
தகுதி : 10th pass ,ITI ,Diploma
வயது வரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் ,BC,MBC வகுப்பினருக்கு 32 வயதிற்குள்ளும் ,SC ,ST வயதினருக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் .
மாத சம்பளம் :Rs.19,500-62,000
Light vehicle Driver -03
Heavy vehicle Driver -05
வயது வரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது .
மாத சம்பளம் :Rs.19,500-62,000
தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்த பட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பக் கட்டணம் : ரூ .250 கட்டணத்தை எதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரைவோலையாக எடுத்து அதை திருப்பூரில் மாற்றத்தக்க வகையில் General Manager,The Tirupur District Co-operative milk Producers (TDCMPU),Tirupur என்ற பெயருக்கு வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை : கல்வித் தகுதி மற்றும் நேர்முகத்தேர்வில் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை ,தேவையான சான்றிதழ் நகலுடன் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி :The General Manager ,Tirupur District Cooperative Milk producers Union ltd..,Veerapandy pirivu,Palladam road ,Tirupur – 641 605.