
தற்போது நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் விளையாடி வருகின்றனர் .இதில் ஆரி அர்ஜுனனும் முக்கியமான இடத்தில் இருந்து வருகிறார் .பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் விளையாடி வரும் ஆரி அர்ஜுனன் , ‘அலேகா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் .
எஸ்.எஸ் .ராஜமித்திரன் “அலேகா” படத்தின் இயக்குனர் ஆவர் .இவர் ஆதி நடித்த அய்யனார் படத்தின் இயக்குனர் ஆவர் .அலேகா படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார் .கதாநாயகியான ஐஸ்வர்யா தத்தா கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவராவார் .இப்படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார் .இப்படமானது முழுமையாக காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும் .அலேகா படத்தின் ட்ரைலரை சமீபத்தில் (ஞாயிற்றுக்கிழமை) பட குழுவினர் வெளியிட்டுள்ளனர் .