புதிய சூப்பர் வேக்சின் : அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி ..

புதிய சூப்பர் வேக்சின் என்ற தடுப்பு மருந்தை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.எல்லா வகையான கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த கொரோனா வைரஸானது பல்வேறு வகையில் உருமாறி தனது வீரியத்தை அதிகப்படுத்தி வருகிறது.குறிப்பாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருமாறி அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.இந்த அனைத்து உருமாறிய வைரஸ்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமெரிக்க ஆய்வாளர்கள் சூப்பர் வேக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் ஹைபிரிட் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.

கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக, ஆன்ட்டிபாடிகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குவது, எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றை உருவாக்கும் கொரோனா வைரஸ்கள் மட்டுமல்லாமல், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பாற்றலை ஏற்படுத்தும் வகையில், புதிய சூப்பர் வேக்சின் தடுப்பு மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பு மருந்து அடுத்த ஆண்டில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Thu Jun 24 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 756, ஈரோட்டில் 641, சேலம் 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 372 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 155 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் […]
district-wise-corona-status-in-tamilnadu-24-6-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய