கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் பரவும் ஒரு வகை பூஞ்சை தொற்று..

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து வருகின்றது.தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு வகையான பூஞ்சை பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முகோர்மைசிசீஸ் எனப்படும் ஒருவகையான பூஞ்சை தொற்று கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. டெல்லியில் பல கொரோனா நோயாளிகள் இந்த தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கொரோனாவின் முதல் அலையின் போதும் இந்த பூஞ்சை தொற்று பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.ஆனால்,தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த பூஞ்சை தொற்றும் அதிகரித்து வருகிறது.

முகோர்மைசிசீஸ் எனப்படும் இந்த பூஞ்சை மிகவும் ஆபத்தை விளைவிக்க கூடியதாகும்.மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் போது முகோர்மைசிசீஸ் என்ற பூஞ்சை அவர்களை தொற்றிக் கொள்கிறது.

முகோர்மைசிசீஸ் பூஞ்சை பாதிப்பால் சிறுநீரகம், இதயம் போன்றவையும் பாதிக்கப்படும்.மேலும் இந்த தொற்று உள்ளவர்களுக்கு கன்னங்களில் வீக்கம், தீவிர மூக்கடைப்பு, கண்ணில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.எனவே இந்த அறிகுறிகள் உடையவர்கள் உடனே மருத்துவரை அணுகி விரைவில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லதாகும்.

Next Post

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் - தமிழக அரசு அறிவிப்பு

Sat May 8 , 2021
நாடு முழுவதும் கொரோனாவின் பெருந்தொற்று நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது .தமிழகத்திலும் கொரோனாவின் வேகம் அதிகரித்து கொண்டே வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது,எனினும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்த வண்ணமே இருந்தது. எனவே ,தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக […]
Full-lockdown-in-tamilnadu-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய