
நாடு முழுவதும் கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசிகள் குறித்து பல ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை தவணையே நல்ல பலன் தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை தவணை அளித்தபோது, அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வைரஸை எதிர்த்து போராடுவதற்கான போதுமான வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை தவணையே தருவதாக கூறப்படுகிறது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் ஜூலை 13 -ல் வெளியிடப்பட்டுள்ளது .இதில் தடுப்பூசியின் ஒற்றை தவணையே நல்ல பலன் தருவதாக கூறப்பட்டுள்ளது.மேலும் மற்ற தடுப்பூசிகளின் ஒற்றை தவணையின் பயன்பாடு குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக,அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் ஒற்றை தவணை 76 விழுக்காடு பயன் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்திய மூன்றே வாரத்தில் 94 விழுக்காடு பயன் அளிக்கிறது என்று மூத்த விஞ்ஞானி ஆண்ட்ரியா கமர்னிக் கூறியுள்ளார்.