வானில் அரிய நிகழ்வு : சூப்பர் பிளட் மூன் உடன் நிகழும் முழு சந்திர கிரகணம்

வானில் நிகழும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.இந்நிகழ்வை இந்தியாவில் இருந்து காண முடியாது என்றும் கூறுகின்றனர். தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்நிகழ்வை காணமுடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழ்வு இந்தியாவில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி மாலை 6.23 மணிக்கு முடிவடையும். அதேபோல முழு சந்திர கிரகணம் மாலை 4.41 முதல் 4.58 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நிகழும் என்று புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி காணலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூப்பர் ப்ளட் மூன் (Super Blood Moon) :

இன்று ஏற்படுகின்ற சந்திர கிரகணம் இரண்டு ஆண்டுகள் கழித்து ஏற்படுகின்ற சந்திரகிரகணமாகும்.சந்திர கிரகணத்தின் போது, சூரிய ஒளி புவியின் வளி மண்டலத்தின் வழியாக பயணித்து, நிலவை சென்றடைகிறது. இதன் காரணமாக நிலவு இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மின்னுவதால் இது “இரத்த நிலவு” என்று அழைக்கப்படுகிறது.

சூரிய அஸ்தமனத்தை ஒத்த பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளிச்சம் சிதறடிக்கப்படுவதால் தூசுகளும் மேகங்களும் ஒன்றாக சூழ்வதன் காரணமாக, சந்திரன் அதிக அளவில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனால் தான் இது “சூப்பர் ப்ளட் மூன்” (Super Blood Moon) என்றும் அழைப்படுகிறது.

சூப்பர் மூன் (super Moon):

சூப்பர் மூன் நிகழ்வு என்பது மே மாதத்தின் மொத்த சந்திர கிரகணத்தின் போது சிவப்பு நிறத்தில் தோன்றுவதோடு கூடுதலாக, சந்திரன் அதன் சுற்றுப்பாதையின் (பெரிஜியில் இருக்கும்) ஒரு பகுதியாக இது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த நிகழ்வு “சூப்பர் மூன்” என்றும் அழைக்கப்படுகிறது.

சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன் (Super Flower Blood Moon) :

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சந்திரன் இயல்பை விட 7 சதவீதம் பெரியதாகவும், 15 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தின் முழு நிலவானது வசந்த காலத்தில் ஏற்படுவதால் “ஃப்ளவர் சந்திரன்” (Flower Moon) என்றும், இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றாக நிகழும்போது, இதனை “சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்” (Super Flower Blood Moon) என்று அழைக்கப்படுகிறது.

Next Post

இந்தியாவில் புதிதாக மீண்டும் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..

Wed May 26 , 2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் ,உயிரிழப்பு சற்று அதிகரித்து கொண்டே வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் […]
corona-again-increases-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய