
விஜய் நடித்த மாஸ்டர் படமானது ஜனவரி13 -ல் திரையரங்குகளில் வெளியாகும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ,விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படமானது கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பொது முடக்கம் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது .கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையரங்குகள் சுமார் எட்டு மாத காலமாக மூடியநிலையில் இருந்தது .
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் தமிழ்நாடு ஆக்ட்டிவ் பிலிம் டிஸ்டிபியூட்டர்ஸ் அச்சொசியாடின் செயலாளர் கே ராஜமன்னார் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.அவர்கள் கூறியதாவது …
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமானது பொங்கல் அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என கூறியுள்ளனர் .இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையும் குறிப்பிட்டுள்ளனர் .தற்போது மாஸ்டர் திரைப்படமானது 3 மொழிகளில் ஜனவரி 13 அன்று வெளியாகவுள்ளது மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் உலகம் முழுவதும் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர் .
மாஸ்டர் திரைப்படமானது கடந்த மார்ச் மாதத்தில் முடிவடைந்து தணிக்கைக்காக காத்திருந்த நிலையில் ,திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதற்கான முயற்சியையும் நடிகர் விஜய் எடுத்ததற்காக அவருக்கு நன்றியையும் தெரிவித்ததாக கூறியுள்ளனர் .
மாஸ்டர் பட வரிசையில் பல படங்கள் முடிந்து, அவை ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிய நிலையில் ,மாஸ்டர் படமானது திரையரங்கில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .நடிகர் விஜய் மாஸ்டர் படம் சம்பந்தமாக நேற்று (ஞாயிற்றுகிழமை) முதல்வரை நேரில் சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது