
பெருஞ்சீரகம் ஆனது நமது உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மையை கொடுக்கிறது .இது பெருமளவில் மருத்துவ தாவரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .இந்தியாவில் சோம்பு என அழைக்கப்படும் இந்த தாவரம் பல ஆண்டுகளாக மருத்துவ தாவரமாக பயன்படுகிறது .இதை நாம் உணவுக்காக மட்டுமே அதிகளவில் பயன்படுத்திவருகிறோம் .
தற்போதைய காலகட்டத்தில் நமது உடல் நலத்தை பேணி காப்பது இன்றியமையாத ஒன்றாகும் .பல்வேறு வகையான நோய்களும் ,அதன் மாறுபாடுகளும் உலகையே அச்சுறுத்தி வருகின்றன .எடுத்துக்காட்டாக, தற்போது உலகையே நடுங்க வைக்கும் கொரோனா ஆனது பல்வேறு வடிவமைப்பை கொண்டு ,அதிதீவீரமாக பரவி வருவதை நாம் காண்கிறோம் .எனவே நம் உடலை நாம் நோயிலிருந்து விடுவித்து கொள்ள ,நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது அவசியமாகும் .உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழி என்றால் அது சரியான உணவுகளை உட்கொள்வதுதான். இதில் பெருஞ்சீரக தேநீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் முக்கிய உணவு பொருளாகும் .
பெருஞ்சீரக தேநீர் செய்வது எப்படி?
முதலில் ஒரு கப் தண்ணீரை எடுத்துகொண்டு அதில் அரை ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்க்கவும். பிறகு 10 நிமிடம் பெருஞ்சீரகத்தை வேக வைக்கவும். பின்னர் வேக வைத்த பெருஞ்சீரகத்தை அடுப்பில் இருந்து கேழே இறக்கவும் .பிறகு 10 நிமிடங்கள் கழித்து அதில் அரை எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும். இப்போது நாம் பெரிதும் எதிர்பார்த்த பெருஞ்சீரக தேநீர் தயாராக உள்ளது.குறைந்த செலவில் ,குறைந்த நேரத்தில் உடலுக்கு வலிமையையும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் இந்த பெருஞ்சீரக தேநீர் பருகி ,நோய் தொற்றை ஒழிப்போம் .
பெருஞ்சீரகத்தின் நன்மைகள் :
1 .வைட்டமின் எ, பி, சி, மற்றும் டி, அமினோ அமிலங்கள் மற்றும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன .
2 .பெருஞ்சீரகத்தில் வைட்டமின் சி என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
3 .பெருஞ்சீரகத்தில் செரிமானத்தை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன.இது செரிமான மண்டலத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனால் பெருஞ்சீரகம் ஒட்டு மொத்த செரிமான செயல்பாட்டையும் மேம்படுத்த உதவுகிறது.
4 .பெருஞ்சீரக தேநீர் குடிப்பது எடை இழப்புக்கு நன்மை பயக்கும். மேலும் செரிமானத்தை ஆரோக்கியமாக்கும்.
5 .பெருஞ்சீரகம் ஆனது பைட்டோ எஸ்ட்ரோஜன்களை கொண்டுள்ளது. இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை கொண்டவர்களுக்கு உதவுகிறது. மேலும் இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஒ.எஸ்) என்ற நோயை குணப்படுத்த உதவுகிறது.
6 . நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருஞ்சீரகம் நன்மை பயக்கிறது.இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை எவ்வாறு குறைக்கிறது.இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு பெருஞ்சீரகம் உதவியாக இருக்கும்.