
சனிப்பெயர்ச்சியின் போது எந்த இடத்தில் சனி கிரகம் சஞ்சரித்தால் அர்த்தாஷ்டம சனி ஏற்படும் .சனி பகவான் ஒரு ராசிக்கு 4ம் இடத்தில் சஞ்சரிக்கக்கூடிய நிலை அந்த ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி ஆகும்.
அர்த்தாஷ்டம சனியின் பாதகங்கள் :
அர்த்தாஷ்டம சனி ஒருவருக்கு தொடங்குகிறது என்றால் ,அவர்கள் எடுத்துவைக்கும் முயற்சியில் வெற்றியை பெறாமல் ,மீண்டும் பழையநிலையையே வந்து அடைவீர் .உறவினர்கள், நண்பர்கள் வழியில் சில வருத்தமான நிகழ்வுகள் ஏற்படும். கல்வியில் மந்த நிலை ஏற்படும்.
அர்த்தாஷ்டம சனி நடக்கக்கூடிய ராசிக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு திடீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுத்தி மருத்துவ செலவுக்கான திடீர் செலவுகள் ஏற்படுத்தும். அதனால் சேமிப்பு பணம் விரயமாகக் கூடிய நிலை ஏற்படும்.பொருள் மற்றும் நிதி செலவுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும்.மற்றவர்களின் விஷயங்களிலிருந்து தள்ளி நிற்பது நல்லது.
தொழிலில் மிக கவனமாக இருப்பது அவசியம். தன் சோம்பலால் பணியை சரியாக முடிக்க முடியாத சூழல் உருவாகும்.உடல் நல பிரச்சினைகள் ஏற்படக் கூடும். சரியான நேரத்தில் சாப்பிடுவது, சரியான அளவு, சரியான உணவை சாப்பிடுவது மிக அவசியம். உடல்நலத்தை கண்ணும் கருத்துமாகக் கண்காணிப்பது அவசியம். உடற்பயிற்சி அவசியம்.
அர்த்தாஷ்டம சனி ஆனது கிரகங்களின் பார்வை, லக்ன சுபர் மற்றும் அசுபர் என்ற நிலைக்கு ஏற்றார் போல தன் பலன்களைத் தருவதாக இருக்கும்.
அர்த்தாஷ்டம சனியின் பரிகாரங்கள் :
ஞாயிற்றுக் கிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதால் உங்களின் நம்பிக்கையும், முயற்சியும் அதிகரிக்கும்.
சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவதும். அனுமனை வழிபடுவதும், உஙக்ள் செயலுக்கு பல மடங்கு பலனைத் தரும்.