
ஒரு பக்க கதை திரைப்படமானது ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஒரு பக்க கதை திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஆவர் .இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற திரைப்படத்தின் இயக்குனர் ஆவர் .
ஒரு பக்க கதை திரைப்படமானது 2015 ஆம் ஆண்டு வெளியிடப்படுவதாக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களுக்காக தாமதமானது. தற்போது இந்த திரைப்படம் ஓடிடி யில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயராமனின் மகனான காளிதாஸ் ஜெயராமன் ,மேகா ஆகாஷ் மற்றும் வேறு சில பிரபலங்கள் நடித்துள்ளனர் .
தற்போது ஒருபக்க கதையின் டீசர் ஆனது வெளியாகியுள்ளது .இதன் முழு படமும் டிசம்பர் 25 அன்று ஜி5 ஓடிடி தலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஒரு பக்க கதை திரைப்படத்திற்கு அடுத்து மக்கள் செல்வன் நடிகர் விஜய சேதுபதியை வைத்து சீதக்காதி என்ற திரைப்படத்தை இயக்கினார் ,அத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது .