
விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்தது,ஆனால் கொரோனா தொற்றின் பொது முடக்கம் காரணமாக மாஸ்டர் திரைப்படம் வெளிவருவதில் தாமதம் ஆனது .
மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு காரணமாக பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் ,இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ,இதில் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை விரும்புவதாக படக்குழு அறிவித்துள்ளது .
படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,பல புகழ்ப்பெற்ற ஓடிடி நிறுவனங்கள் மாஸ்டர் திரைப்படத்தை தாங்கள் வெளியிடுகிறோம் என எங்களை அணுகினர் ,ஆனால் நாங்கள் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதையே விரும்புகிறோம் என படக்குழு தெளிவான முடிவு ஒன்றை வெளியிட்டது .
தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலிலிருந்து தமிழ்த் திரை உலகம் மீண்டு வர அனைவரும் துணைநிற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் படக்குழுவினர் தெரிவித்தனர் .