
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது .
ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் தீப ஒளித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் .இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அவர்களின் வாழ்வில் ஒளி வீச அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு அருள் பெறுவார்கள் .ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு 28 ,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார் .
திருவண்ணாமலை கோவிலின் முக்கிய நிகழ்வாக பரணி தீபமானது அதிகாலை 4 மணிக்கு (29 ஆம் தேதி ) கோவில் மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது.அன்று மாலை 6 மணியளவில் 2668 அடியில் மகா தீபமானது ஏற்றப்படுகிறது .தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .