
இயக்குனர் பாலா வின் திரைப்படத்தை அடுத்து மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா ஜோடி.
இயக்குனர் ஆனந்த் சங்கர் எனிமி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் .இதில் விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
இயக்குனர் ஆனந்த் சங்கர் அரிமா நம்பி,இருமுகன் ,நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் ஆவர் .இவர் தற்போது இயக்கி வரும் படத்திற்கு எனிமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாகவும் ,படப்பிடிப்பானது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது .
தற்போது நடிகர் ஆர்யா பா.ரஞ்சித் இயக்கத்திலும் மற்றும் டெடி என்ற மற்றுமொரு படத்திலும் நடித்து வருகிறார் ,அதேபோல் நடிகர் விஷால் சக்ரா படப்பிடிப்பை சமீபத்தில் முடித்ததாகவும்,பின்னர் இத்திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .