
இயக்குனர் சுசீந்திரன் படைப்பில், சிம்புவின் அதிரடி நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார் .சிம்புவின் வந்த ராஜாவாதான் வருவேன் எனும் திரைப்படமானது கடந்த ஆண்டு வெளியானது .
இத்திரைப்படத்தை தொடர்ந்த தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் சுசீந்திரனுடன் கைக்கோர்த்தார் நடிகர் சிம்பு .சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமானது பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் ஆனது தீபாவளிக்கு வெளியாகும் என நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .
சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது .