
ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் மாயூரநாதர்சுவாமி திருக்கோவிலில் துலா உற்சவம் ஆனது காவேரி துலாக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது .இதனையொட்டி இந்த ஆண்டு ஐயப்பசி மாதத்தில் துலா உற்சவம் ஆனது தொடங்கியது.
இன்று கொடியேற்றத்துடன் மயிலாடுதுறை மாயூரநாதர்சுவாமி திருக்கோவில் துலா உற்சவமானதுதொடங்கியது .இதில் குறைந்த பக்தர்களுடன் உற்சவமானது நடைபெற்றது நடத்தப்பட்டு .
மாயூரநாதர்சுவாமி திருக்கோவிலின் சிறப்பு :
மயிலாடுதுறை திருக்கோவிலில் சிவபெருமானின் அனுகிரகத்தின் படி அனைத்து புன்னிய நதிகளும் இந்த காவேரி துலா கட்டத்தில் புனித நீராடி தம் பாவத்தை போக்கி கொண்டனர் என்பதை புராண வரலாறு கூறுகிறது .எனவே மயிலாடுதுறையில் உள்ள சிவ ஆலயங்களில் துலா உற்சவமானது 10 நாட்கள் விமர்சையாக நடைபெற இருக்கிறது ,இதன் தொடக்கமாக இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.இதில் இன்று ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது .
துலா உற்சவத்தின் பத்து நாட்களிலும் அஸ்திரதேவர் துலாக்கட்டம் காவிரியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .கொரோன தொற்றின் காரணமாக குறைந்த பக்தர்களே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .