
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.பிள்ளைகளால் நற்செய்தி தேடி வர வாய்ப்பு உள்ளது .சிலருக்கு எதிர்பார்த்த பண வரவுக்கு வாய்ப்பு உண்டு . .சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும் .கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் .வியாபாரத்தில் லாபமானது வழக்கம் போலவே நடைபெறும் .
ரிஷபம்
இன்று உங்களுக்கு பல வகைகளிலும் அனுகூலமான நாளாக அமையும் .எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .கணவன் மனைவி இடையே இருந்த மன கசப்புகள் நீங்கும் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமானது கிடைக்கும் .உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் . .எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .சகோதரர்களால் சில நன்மைகள் உண்டாகலாம். .எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும் .உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பது நல்லது .
கடகம்
இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும் .சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். . சுப செய்திகள் தேடி வரும் .உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் .பணவரவு அதிகரிக்கும் .வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உறவினர்கள் மூலம் ஆதாயமானது கிடைக்கும் .வியாபாரத்தில் லாபமானது அதிகரிக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எடுப்பதற்கு உகந்த நாளாகும் .உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் .பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே நடைபெறும் .
கன்னி
கன்னி ராசி நண்பர்களே இன்று உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள் .கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.எதிர்ப்பாராத செலவுகள் இருப்பதால் சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கணிசமாகவே நடைபெறும் .நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
துலாம்
இன்று உங்கள் உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு .வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வெளியூரிலிருந்து நற்செய்தியானது தேடி வரும் .குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் நடப்பது அவசியமாகும் .குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள் .உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்தல் நல்லது.வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .
தனுசு
இன்று நீங்கள் சுறு சுறுப்பாகவும் ,உற்சாகமாகவும் செயல்படுவீர்கள் .குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் .உங்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் .திருமணம் மற்றும் சுப காரியங்களில் முன்னேற்றமானது உண்டாகும் .வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .
மகரம்
மகர ராசி நண்பர்களே குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக அமையும் .அரசு சார்ந்த காரியங்கள் சாதகமாக அமையும் .பேசும் பேச்சில் கவனம் தேவை .மற்றவர்களுடன் வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியமும் பாராட்டும் கிடைக்கும் .உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை.வியாபாரத்தில் லாபமானது கணிசமாகவே நடைபெறும் .
கும்பம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள் .குடும்ப பொறுப்புகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள்.குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் .
மீனம்
இன்று நீங்கள் புதிய முயற்சிகளை தவிர்க்கவும் ,பொறுமையுடன் செயல்படவேண்டிய நாளாகும் .நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.