
முத்துராமலிங்க தேவர் இந்தியாவின் முக்கிய தேசிய தலைவரும் ,சுதந்திர போராட்ட தியாகியான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஜெயந்தி மற்றும் 58 வது குரு பூஜை இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது .
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேவரின் சிலைக்கு ,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
முத்துராமலிங்கத்தேவரின் அரசியலும் ,வாழ்வியலும் :
முத்துராமலிங்க தேவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்னும் சிற்றூரில் உக்கிரபாண்டி தேவருக்கும் ,இந்திராணி அம்மையாருக்கும் 1908 ,அக்டோபர் 30 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார் .தேவர் தம் வாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் கொண்டவராக இருந்தார்.
தேவர் அவர்கள் தென்பகுதியில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார்.அவரின் ஈடுபாட்டால் போராட்டமானது உச்சகட்டத்தை எட்டியது.தேவர் அவர்களின் போராட்டத்தால் குற்ற பரம்பரை சட்டமானது நீக்கப்பட்டது .
முத்துராமலிங்க தேவர் தாழ்த்தப்பட்டோருக்கான அநீதியையும் ,தொழிலாளர்களுக்கான முன்னேற்றத்துக்காகவும் தேவர் அவர்கள் கடுமையாக பாடுபட்டார் .சுதந்திர இந்தியாவில் முதல் பொது தேர்தலானது 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது .இதில் தேவர் அவர்கள் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார்.போட்டியிட இரண்டு இடத்திலும் வெற்றி கண்டார் .அவரின் அரசியல் பயணம் 1962 லோக் சபா தேர்தல் வரை முன்னேறி சென்றது .
பின்னர் ,தொடர் அரசியலால் உடல்நிலை பாதிக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் 1963-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ம் தேதி, பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.