ஊரகத் திறனாய்வுத் தேர்வு – TRUST Examination 2021 ..

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ” ஊரகத் திறனாய்வு தேர்வு ” ஆண்டு தோறும் அரசுத் தேர்வுத் துறையால் நடைபெற்று வருகிறது.

தகுதியான தேர்வர்கள் இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் 9 – ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள்.

நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவராவர். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000 / – க்கு ( ரூபாய் ஒரு இலட்சத்திற்கு ) மிகாமல் இருத்தல் வேண்டும்.

30.01.2022 அன்று நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை 06.12.2021 முதல் 14.12.2021 வரை www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து , அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 14.12.2021 க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் புதிதாக 10,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..

Fri Nov 26 , 2021
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,55,431 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 488 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,67,468 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் […]
covid-19-vaccine-india-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய