தமிழகத்தில் புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு ..

தமிழகத்தில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும் திருச்சுழி(திருப்பூர்), திருக்கோவிலூர்(கள்ளக்குறிச்சி), தாளவாடி(ஈரோடு), ஒட்டன்சத்திரம்(திண்டுக்கல்), மானூர்(திருநெல்வேலி), தாராபுரம்(திருப்பூர்), ஏரியூர்(தர்மபுரி), ஆலங்குடி(புதுக்கோட்டை), சேர்க்காடு(வேலூர்), கூத்தாநல்லூர்(திருவாரூர்) ஆகிய 10 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார் .

மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும் இளங்கலை தமிழ், ஆங்கிலம், இளமறிவியல் கணிதம், இளநிலை வணிகவியல், இளமறிவியல் கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.அடுத்த கல்வியாண்டில்(2022-23) 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (கூத்தநல்லூரில் மட்டும் மகளிர் கல்லூரி, மற்ற 9 இடங்களிலும் இரு பாலர் கல்லூரிகள்) தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Sat Nov 20 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 879 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,361 ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரு நாளில் மட்டும் 1,00,998 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய