3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு – மத்திய அரசு அறிவிப்பு..

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குருநானக் ஜெயந்தியையொட்டி, பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நேர்ந்திரே மோடி உரையாற்றினார். அப்போது மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட அறிக்கையில் , வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு என கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும். குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லூர்கள் இடம்பெறுவார்கள். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Next Post

இந்தியாவில் புதிதாக 11,106 பேருக்கு கொரோனா தொற்று..

Sat Nov 20 , 2021
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,89,623 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 459 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,65,082 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் […]
coronavirus-india-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய