இந்தியாவில் புதிதாக கொரோனா உருமாற்றம் அடையவில்லை – மருத்துவ நிபுணர்கள்..

இந்தியாவில் தற்போது புதிதாக கொரோனா உருமாற்றம் அடையவில்லை என மருத்துவ நிபுணர்கள் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பல வகைகளாக உருமாற்றம் அடைந்தது .அந்த வகையில் 2 முறை உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் அதிக வீரியம் கொண்டதாக மாறியது. அதுதான் இந்தியாவில் 2-வது அலையை ஏற்படுத்தியது.

தற்போது இந்த வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து பரவத் தொடங்கியது. டெல்டாவில் இருந்து உருமாறிய ஏஒய்.4.2 வைரஸ் இங்கிலாந்து, அமெரிக்காவில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஏஒய்.4.2 வைரஸ் பரவத் தொடங்கி இருப்பதாகவும், அது சிலரை தாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் புதிதாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடையவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் குழுவான இன்சாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு டெல்டா வைரசின் மாறுபாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய துணை வகைகளாகும். டெல்டா வைரஸ் (பி.1.6177.2 மற்றும் ஏஒய்.எக்ஸ்) மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் புதிதாக உருமாற்றம் அடையவில்லை. ஏஒய்.எக்ஸ் என்பது 1-25 வரையிலான துணை கோடுகளின் குடும்பத்தை குறிக்கிறது.

தற்போது அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு டெல்டாவின் உருமாற்றம் தான் காரணம். புதிதாக எதுவும் உருமாற்றம் அடையவில்லை என்று கூறப்படுகிறது.

Next Post

கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 77.8 சதவீதம் - ஆய்வில் தகவல்

Sat Nov 13 , 2021
இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசி, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக 77.8 சதவீத செயல்திறன் கொண்டிருப்பதாக ‘தி லான்செட்’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தடுப்பூசிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் ‘செயலிழந்த-வைரஸ் தொழில்நுட்பம்’ தான் கோவேக்சின் தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக் கொண்டவர்களுக்கு, 2 வாரங்களுக்குப் பின்னர் அவர்களது உடலில் ஒரு வலுவான எதிர்ப்பு […]
covaxin-Efficient-vaccination
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய