
இந்திய அரசால் வழங்கப்படும் ‘கேல் ரத்னா விருது’ விளையாட்டு துறையில் உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருதின் பெயரை ‘தியான்சந்த் கேல் ரத்னா விருது’ என மாற்றி பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விளையாடுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றனர். இவர்களில் நீரஜ் சோப்ரா, ரவி குமார் தஹியா, லவ்லீனா போர்கோஹெய்ன் உள்ளிட்ட 12 பேருக்கு இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடப்பாண்டிற்க்கான கேல் ரத்னா விருது பெறும் வீரர்களின் பெயர்களை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 13-ம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், இந்த விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான ‘தியான்சந்த் கேல் ரத்னா விருது’ பெறும் வீரர், வீராங்கனைளின் பெயர்கள் வருமாறு;-
- நீரஜ் சோப்ரா (தடகளம்)
- ரவி குமார் தஹியா (மல்யுத்தம்)
- லவ்லீனா போர்கொஹெய்ன் (குத்துச்சண்டை)
- ஸ்ரீஜேஷ் (ஹாக்கி)
பாராலிம்பிக் வீரர் வீராங்கனைகள்
- அவானி லெக்ரா
- ப்ரமோத் பகத்
- கிருஷ்ணா நகர்
- மணிஷ் நார்வால்
- சுமித் அண்டில்
- மிதாலி ராஜ் (கிரிக்கெட்)
- சுனில் செத்ரி (கால்பந்து)
- மன்ப்ரீத் சிங் (ஹாக்கி)