
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு கல்வி அமர்வை இரண்டாக பிரிப்பது, 2 பருவங்களாக பொதுத்தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ. திட்டமிட்டிருந்தது.
இதன்படி, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சில மாணவர்கள் பள்ளி அமைந்திருக்கும் நகரத்தில் இருந்து வேறுநகரத்தில் வசிப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் , சில மாணவர்கள் தங்கள் பள்ளி அமைந்திருக்கும் நகரங்களில் இல்லை என்றும், வேறு நகரங்களில் வசிக்கிறார்கள் என்றும் சில தகவல்கள் மத்திய கல்வி வாரியத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பொருத்தமான நேரத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு தேர்வு மைய நகரத்தை மாற்ற அந்தந்த பள்ளிகளுக்கு அவர்கள் கோரிக்கை வைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் ,ஆன்லைன் மூலம் இந்த கோரிக்கையை சி.பி.எஸ்.இ. கொடுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றி பதிவு செய்ய வேண்டும். அதற்கு மாணவர்களும், பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. இணையதளத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். அட்டவணை தயாரான பிறகு தேர்வு மையம் அமைந்துள்ள நகரத்தை மாற்றுவதற்கான எந்த கோரிக்கையும் வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.