
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் குறைவாக இருப்பதால் பள்ளி நேரத்திற்கு பின் ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் 9-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நவ.1 ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் குறைவாக இருப்பதால், பள்ளி நேரத்திற்கு பின், ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.