
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு அறிவிக்கும் பணியானது நேற்று தொடங்கியது. இதில் முதல் விருதாக, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்டபவுசியன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு இப்பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசானது சியுகுரோ மனாபே( அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் ( ஜெர்மனி) மற்றும் ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.