
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிலும் கவனமாகவும் ,சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும் .இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் ஈடுபடும் வேளைகளில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும் .மற்றவர்களை அனுசரித்து நடப்பது நல்லது .வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்தல் போவது மகிழ்ச்சி தரும் .முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் ஒரு சில இடையூறுகளும் சங்கடங்களும் ஏற்படலாம் .இன்று நீங்கள் விநாயக பெருமானை வழிபடுதல் நல்லது .
ரிஷபம்
இன்று நீங்கள் உற்சாகமாகவும் சுறு சுறுப்புடனும் செயல்படுவீர்கள் .நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செயவீர்கள்.
இன்று நீங்கள் வெற்றிக்கு தேவையான புதிய பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்க முயல்வீர்கள் .உங்கள் துணைவியின் உறவுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும் .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் .வேளையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்புகள் அதிகம் .
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும் ,துணிச்சலுடனும் முடிவு எடுப்பீர்கள் .நீண்ட நாட்களாக வந்து சேராத கடன்கள் வந்து சேரும் .உங்கள் எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும் .திருமணம் மற்றும் சுபகாரிய நிகழ்ச்சிகளில் முன்னேற்றம் இருக்கும் .பெரிய மனிதர்களின் அறிமுகமானது கிடைக்கும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏர்படும் .
கடகம்
கடக ராசி நண்பர்களே இன்று சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும் .பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும் . சிலருக்கு அலுவலகங்களில் பணிச்சுமையானது அதிகரிக்கும் .புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்த்தல் நல்லது .வீண் பிரச்சனைகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் ,லாபமும் கிடைக்கும் .
சிம்மம்
இன்று உங்கள் குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் .முக்கிய பிரமுகர்களை சந்திப்பதுடன் அவர்களின் மூலம் ஆதாயம் கிட்டும் .எதிர்ப்பாராத பண வாய்ப்புகளும் வரும் .உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .உத்தியோகத்தில் பதவி உயர்வானது கிடைக்கும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும் .
கன்னி
கன்னி ராசி நண்பர்களே இன்று நீங்கள் வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது.கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மன கசப்புகள் நீங்கி நெருக்கம் அதிகமாகும் .சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வைய்ப்புகள் அதிகம் .நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியானது கிடைக்கும் .வியாபாரத்தில் முன்னேற்றமும் , லாபமும் கிடைப்பது கூடுதல் மகிழ்ச்சியை தரும் .சுப காரியங்கள் அனைத்தும் கைகூடும் .
துலாம்
இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாகும் .பண வரவுகளும் அதற்கேற்றாற்போல் வீண் செலவுகளும் அதிகரிக்கும் .தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவியானது கிடைக்கும் .கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்தல் போவது நெருக்கத்தை அதிகரிக்கும் .வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுத்தேறுவீர்கள்.உங்கள் அணைத்து முயற்சிக்கும் உங்கள் துணைவி முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் .வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திரன் இருப்பதால் விரைவில் முடியவேண்டிய சில காரியங்கள் தாமதமாகும் .சிலருக்கு எதிர்பார்த்த பண வரவுகள் அதிகரிக்கும் .இன்று உங்கள் மன உறுதியுடன் செயல்படுவீர்கள் .தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும் .மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும் .வியாபாரத்தில் சில இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும் .
தனுசு
தனுசு ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு திடிர்ச்செலவுகள் அதிகரிக்கும் .தேவையற்ற செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருத்தல் சேமிப்புக்கு வழி வகுக்கும் .உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருத்தல் அவசியம் .கணவன் மனைவி இடையே ஒற்றுமையானது அதிகரிக்கும் .வியாபாரத்தில் கடின உழைப்பானது லாபத்திற்கு வழி வகுக்கும் .உடல் ஆரோக்கியத்தில் பிற்பகலுக்கு மேல் கவனம் தேவை .பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் .
மகரம்
இன்றைய நாள் உங்களுக்கு சந்தோசம் தரக்கூடிய நாளாக அமையும் .சிலருக்கு எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கும் .வீட்டின் பொருளாதார நிலை சிறப்பாக அமையும் .பிள்ளைகள் கேட்பதை மகிழ்ச்சியுடன் வாங்கி தருவீர்கள் .குடும்ப பொறுப்புகளை ஏற்று நடப்பீர்கள் .உங்கள் முயற்சிக்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும் . வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும் .அலுவலுகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் .
கும்பம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும் .சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் .எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும் .குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும் .வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும் .திட்டமிட்ட சுப காரியங்கள் கைக்கூட வாய்ப்புகள் அதிகமாகும் .
மீனம்
மீனா ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும் .பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடத்தல் நன்மையை தரும் .தீர்க்க முடியாத நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும் .நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும் .வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக இருத்தல் அவசியமாகும் .உடனிருப்பவர்களின் ஆதரவானது கிடைக்கும் .வீண் செலவுகளை குறைத்தல் சேமிப்புக்கு வழி வகுக்கும் .