
அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.500 கோடி மதிப்பில், அதிநவீன வசதிகளுடன்கூடிய உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவிப்பு.
மாணவர்கள் இணைய வசதியுடன் கல்வி கற்கும் வகையில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் (ஹை-டெக் லேப்) அமைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.
உயர் கல்விக்கு செல்லும்போது, அதற்கான நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகள் மற்றும் அலுவல் பணிகள் பெரும்பாலும் கணினி சார்ந்தவையாக உள்ளன.எனவே, அரசுப் பள்ளி மாணவர்களின் கணினி திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப, அரசுப் பள்ளிகளில் நவீன ஆய்வகங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் முதல்கட்டமாக 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைக்கேற்ப 10 முதல் 20 கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளில் ரூ.500 கோடி மதிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன
அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் ஹை-டெக் லேப் அமைக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பாடப் புத்தகங்களில் உள்ள க்யூஆர் கோடு வசதியை மாணவர்கள் கணினி வழியாக பயன்படுத்தி, கூடுதல் தகவல்களை அறியலாம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை வாரந்தோறும் 2 பாட வேளைகள் கணினி பயிற்சிக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.