
மேஷம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு செயல்படும் நாளாகும்.காரியங்கள் கைக்கூடும்.உங்கள் துணைவியினால் மகிழ்ச்சி உண்டாகும் .இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் முடிக்கவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகவே முடியும் .வீண் விவாதங்களை தவிர்த்தல் நல்லது ஆகும் .புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் .
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாகும் .இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .சகோதரர்களின் வழியில் அன்பும் ஆதரவும் உண்டாகும் .நீங்கள் எடுத்த காரியத்தை பொறுமையுடனும் ,வெற்றியுடனும் செய்து முடிப்பீர்கள் .பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் .வியாபாரத்தில் சகா பணியாட்களுடன் சுமுகமான உறவே ஏற்படும் .உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும் .
மிதுனம்
நீங்கள் இன்று தெளிவின்றி ,சுறுசுறுப்பின்றி காண்பீர்கள் .திடீர் செலவுகள் அதிகமாகும் .கணவன் மனைவி இடையே ஒருசில மன கஷ்டங்கள் ஏற்படலாம் .வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது ஆகும் .வியாபாரத்தில் மற்றவர்களை அனுசரித்து நடப்பது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் .காரியங்களில் அனுகூலம் உண்டாகும் .குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும் உடன் பண வரவுலகும் வரும் .
கடகம்
இன்று நீங்கள் பொறுமையுடன் நடத்தல் அவசியமாகும் .மனதில் ஒரு வகையான சங்கடங்கள் ஏற்படலாம் .எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கவேண்டிய பணம் ஆனது தாமதமாகும் .மற்றவர்கள் உங்களின் தேவையை அறிந்து உங்களுக்கு உதவுவார்கள் .உங்கள் துணைவியால் செலவுகளும் ,உறவினர்களால் சில சங்கடங்களும் ஏற்படும் .வியாபாரத்தில் மற்றவர்களிடம் அனுசரித்து நடப்பது நல்லது ஆகும் .
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும் .உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை .உங்கள் முயற்சிக்கு உங்கள் துணைவி பக்கபலமாக இருப்பாள் .பிள்ளைகளால் சுபச் செய்தி தேடி வரும் .குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள் .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .பூர்விக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும் .வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் .
கன்னி
இன்று நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சனைகள் தீரும் .சிலருக்கு திடீர் பண பிரச்சனைகளும் ,பண வரவுகளும் வரும் .நீங்கள் பேசும் பேச்சில் நிதானமும் ,கவனமும் தேவை .அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து நடப்பது நல்லது ஆகும் .வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது.உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் ,வியாபாரத்தில் லாபமானது கணிசமாகவே நடைபெறும் .
துலாம்
துலாம் ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும் .குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் .திருமண சுப காரியங்களில் வெற்றியானது கிடைக்கும் . பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும் .திறமையாகவும் ,புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும் .வீண் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்தல் நல்லது .
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும் .சுபகாரியங்களில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும் .வாழ்க்கைத்துணையுடன் சில மன கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடப்பது நல்லது .புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது.வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து நடப்பது வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் .பண வரவு சிறப்பாக அமையும் ,குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் .
தனுசு
இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாகும் .குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும் .நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகும் .வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும் .நண்பர்கள் உங்களிடம் பண உதவி கேட்டு வருவார்கள் .வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும் .உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது ஆகும் .
மகரம்
மகர ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும் .உங்கள் எதிரிகளால் ஏற்பட்ட இடையூருகள் நீங்கும் .முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாகும் .பண வரவு அதிகரிக்கும் .உத்தியோகத்தில் வருமானம் அதிகரிக்கும் .புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு உகந்த நாளாகும் .பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு மதிப்பார்கள் .வெளிவட்டாரத்தில் மதிப்பானது அதிகரிக்கும் .
கும்பம்
இன்று நீங்கள் உற்சாகத்துடன் வேலைகளை தொடங்குவீர்கள் .புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது .வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும் .நண்பர்களுக்கு பல உதவிகளை செய்து கொடுப்பீர்கள் .தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும் .எதிரிகள் வழியில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .கவனுமுடன் செயல்படுதல் நல்லது .
மீனம்
மீன ராசி நண்பர்களே இன்று எதிலும் கவனமுடன் செயல்படுதல் நல்லது .எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படலாம் .எதிர்பார்த்த பண வரவு கிடைப்பதில் தாமதமாகும் .
மற்றவர்களை அனுசரித்து நடப்பது நல்லது .அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்த்தல் நல்லது .